வேலணையில் வெகு சிறப்பாக நடைபெற்ற, திரு நடா சிவராசா அவர்களின் சி.சி.தூறல்கள் கவிதை நூல் வெளியீட்டு விழா-படங்கள்  இணைப்பு!

வேலணையில் வெகு சிறப்பாக நடைபெற்ற, திரு நடா சிவராசா அவர்களின் சி.சி.தூறல்கள் கவிதை நூல் வெளியீட்டு விழா-படங்கள் இணைப்பு!

தீவகம்  வேலணைகிழக்கைப் பிறப்பிடமாகவும், தற்போது பிரித்தானியா தேசத்தில் வசித்து வருபவருமான வேலணையூர் நடராசா சிவராசா அவர்களின் கவிதை தொகுப்பு வெளியீட்டு விழா- இன்று  16.03.2018  சனிக்கிழமை மாலை 3,30 மணிக்கு வேலணை பெருங்குளம் முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள பெரியார் தில்லையம்பலம் செல்லமுத்து அவர்களின் அமுதசுரபி மண்டபத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

திரு நடராசா சிவராசா அவர்களின் சின்னச் சின்ன தூறல்கள் கவிதை தொகுப்பு அறிமுக விழாவானது தொழிலதிபர் திரு செ.பொன்னுச்சாமி அவர்களின் தலைமையில் நடைபெற்றது .

இவ்விழாவில், பிரதம விருந்தினராக ஓய்வுநிலை அதிபர் திருவாளர் பொ.நடராசா அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக ஓய்வுநிலை பிரதிக் கல்விப்பணிப்பாளர் திரு பி.முத்துலிங்கம் அவர்களும், ஒய்வுநிலை ஆசிரிய ஆலோசகர் திரு பொ.சிவசுந்தரம் அவர்களும் கலந்துகொண்டனர்.

மேலும் கௌரவ விருந்தினர்களாக, வேலணை பிரதேசசபையின்  தவிசாளர் திரு ந.கருணாகர குருமூர்த்தி அவர்களும், வேலணை பிரதேச சபைஉறுப்பினர் திரு தி.ஹேமதாஸ் அவர்களும், வைத்தியர் திரு க.ஜெயச்சந்திரமூர்த்தி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

வரவேற்புரையை, கவிஞர் வேலணையூர் சுரேஸ் அவர்களும், வாழ்த்துரையை பேராசிரியர் சமாதிலிங்கம் சத்தியசீலன் அவர்களும் வெளியீட்டுரையை ஆசிரியர் சைவப்புலவர் வே.கமலேஸ்வரன் அவர்களும் நூல் ஆய்வுரையை வலப்புரி பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் இயக்குனரும் பாடசாலை அதிபருமான ந.விஜயசுந்தரம்அவர்களும் ஆற்றினார்கள் .

கவிதை நூலை , வேலணை பிரதேச செயலகத்தின் கணக்காளர் திரு இ.ரமணண் அவர்கள் -நூலாசிரியரின் மாமியாரான திருமதி மதியாபரணம் கமலாதேவி அவர்களிடமிருந்து பெற்று வெளியீட்டு வைத்தார்.

முதல்பிரதியை இ.ரமணன் அவர்களிடமிருந்து சிறி மதனா நகையக உரிமையாளர் திரு வே.பரசிவம் அவர்கள் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து சிறப்புப் பிரதிகள் வழங்கிவைக்கப்பட்டது. ஏற்புரையை நூலாசிரியர் திரு நடராசா சிவராசாஅவர்கள் ஆற்றினார். இறுதியில் நூலாசிரியரின் சகோதரரும் ஒய்வுநிலை ஆசிரிய ஆலோசகருமான திரு ந.ஜெகநாத் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.இவ்விழாவில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux