யாழ் வானகம் அலைபேசி விற்பனை நிலையத்தின்  உரிமையாளர்களான,தந்தையும்,மகனும்,மின்சாரம் தாக்கியதில் பலி-விபரங்கள் இணைப்பு!

யாழ் வானகம் அலைபேசி விற்பனை நிலையத்தின் உரிமையாளர்களான,தந்தையும்,மகனும்,மின்சாரம் தாக்கியதில் பலி-விபரங்கள் இணைப்பு!

வடமராட்சியில் சோகம்…
மின்சாரம் தாக்கியதில் தந்தையும், மகன் பலி….

வடமராட்சி  கரவெட்டி, கரணவாய் கிழக்கில் மின்சாரம் தாக்கி தந்தையும் தனயனும் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை 23.05.2018  காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டில் டிஷ் ரிவி வேலை செய்யாத காரணத்தால், கேபிள் ரீவி இணைப்பில் வயரைப் பொருத்த முற்பட்ட போது, அதி உயர் மின் அழுத்தம் தாக்கியதிலேயே தந்தையும் மகனும் உயிரிழந்தனர்.

யாழ் நகரில் வானகம் அலைபேசி விற்பனை நிலையத்தை நடத்தும் ஜெகநாதன் (வயது- 50), அவர்களும்-அவரது மகன்  சஞ்சீவன் (வயது- 29) ஆகிய இருவருமே உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக மேலும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux