அல்லையூர்   இணையத்தினால், ஆதரவற்ற மாணவர்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது-படங்கள் இணைப்பு!

அல்லையூர் இணையத்தினால், ஆதரவற்ற மாணவர்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது-படங்கள் இணைப்பு!

அல்லையூர் இணையத்தின் நேரடி நிதி அனுசரணையில் இயங்கி வரும்-அம்பாறை அக்கரைப்பற்று பனங்காடு கிராமத்தில் அமைந்துள்ள மறுமலர்ச்சி முன்பள்ளி மாணவர்களின் குடிநீர்த் தேவை இன்றைய தினம் (08.05.2018 ) அன்று  பூர்த்தி செய்யப்பட்டது.

இதற்கான நிதியினை, கடனாவில் வசிக்கும்,எமது தீவகத்தைச் சேர்ந்த, சத்தியநேசன்-லக்ஸி தம்பதியினரின் செல்வமகள் அதிசயாவின் 3வது பிறந்தநாளை முன்னிட்டு பெற்றோர்கள் வழங்கியிருந்தனர்-கடந்த 14.04.2018 தமிழ்புதுவருடத்தன்று  இந்தக் குடிநீர்த் தொட்டி வழங்கிவைக்கப்பட்டது.
இப்பகுதி பிரதேசபையின் அனுமதி பெற்றபின்னர்-இன்றைய தினம்  தொட்டியில் நீர் நிரப்பப்பட்டு மாணவர்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்கும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இப்பாடசாலையானது,அல்லையூர் இணையத்தின் நேரடி நிதி அனுசரணையில் கடந்த மாதத்திலிருந்து இயங்கி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

அடுத்து….

அல்லையூர் இணையத்தினால், யாழ் உடுவிலில் அமைந்துள்ள Home for the Mentally Challengen children மாணவர்களின் நலன்கருதி-செலவுகள் உட்பட 40 ஆயிரம் ரூபாக்கள் பெறுமதியில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்று 02.05.2018 வியாழக்கிழமை அன்று வழங்கி வைக்கப்பட்டது.இதற்கான நிதியினை எமது அறப்பணிக்கு தொடர்ந்து உதவிவருபவரும்- கருணையுள்ளம் கொண்டவருமான-எமது மண்டைதீவு மண்ணின் மைந்தர் திரு சக்திதாசன் சிவசரணம் அவர்கள்  வழங்கியிருந்தார்.அவருக்கு இம்மாணவர்களின் சார்பிலும்-அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் சார்பிலும்-நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.சுத்திகரிக்கப்பட்ட சுத்தமான குடிநீரினை,விஷேடதேவைக்குட்பட்ட-இப்பாடசாலை மாணவர்கள் மகிழ்வுடன் அருந்துவதனை கீழே இணைக்கப்பட்டுள்ள படங்களில் காணலாம்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux