அல்லைப்பிட்டியில் நலிவுற்ற 60 குடும்பங்களுக்கு வாழ்வாதார நன்கொடைகள் வழங்கிவைப்பு-  வீடியோ மற்றும் படங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியில் நலிவுற்ற 60 குடும்பங்களுக்கு வாழ்வாதார நன்கொடைகள் வழங்கிவைப்பு- வீடியோ மற்றும் படங்கள் இணைப்பு!

யாழ்  மண்டைதீவு,அல்லைப்பிட்டியில் பேரும்,புகழுடன் வாழ்ந்து மறைந்த,அமரர்கள் திரு,திருமதி இரத்தினசபாபதி-சிவயோகலட்சுமி தம்பதியினரின் ஞாபகார்த்தமாகவும்-அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகனின் ரதோற்சவத்தை முன்னிட்டும்- அல்லைப்பிட்டி முழுவதிலும் பாகுபாடின்றித் தெரிவு செய்யப்பட்ட நலிவுற்ற அறுபது குடும்பங்களைச் சேர்ந்த,உறுப்பினர்களுக்கு, 28.04.2018 சனிக்கிழமை அன்று அல்லைப்பிட்டி உபதபால் அலுவலகத்தில் வைத்து  வாழ்வாதார நன்கொடைகள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில்  புலம்பெயர் நாடுகளில் வசிக்கும்-அன்னார்களது பிள்ளைகள் கலந்து கொண்டு-தங்கள் கரங்களால் நலிவுற்ற மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை  வழங்கி வைத்து மகிழ்ந்தனர்.

இவ்வுதவிகள் தொடர்ந்தும் தங்கள் பெற்றோர்களின் நினைவாக,வழங்கப்படும்-என்று எமது இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux