அல்லையூர் இணையத்தின் நேரடி நிதி அனுசரணையில் அம்பாறையில் முதலாவது முன்பள்ளி திறந்து வைப்பு-விபரங்கள்  இணைப்பு!

அல்லையூர் இணையத்தின் நேரடி நிதி அனுசரணையில் அம்பாறையில் முதலாவது முன்பள்ளி திறந்து வைப்பு-விபரங்கள் இணைப்பு!

இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள  அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட- பனங்காடு கிராமத்தில் வசிக்கும் ஏழை மாணவர்களின் நலன்கருதி, அல்லையூர் இணையத்தின் நேரடி நிதி அனுசரணையில் முதலாவது முன்பள்ளி 06.04.2018 வெள்ளிக்கிழமை அன்று  உத்தியோகபூர்வமாக மீள ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த மாதத்திலிருந்து  இந்த முன்பள்ளி சிறப்பாக இயங்குவதற்கான முழுப்பொறுப்பினையும்,அல்லையூர் இணையம் ஏற்றுக்கொண்டுள்ளது.

இம்முன்பள்ளியின் ஆரம்ப நிகழ்வுக்கான நிதியினை,யாழ் தீவகம் மண்டைதீவுக் கிராமத்தில் பிறந்தவரும்,மண்டைதீவு முத்துமாரி அம்பாள் ஆலய அறங்காவலர் சபையின் முன்னாள் தலைவரும்,பிரபல புகையிலை வர்த்தகரும்,சமூக ஆர்வலருமாகிய,அமரர் சின்னத்தம்பு வைரவநாதன் அவர்களின் 10வது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு-அன்னாரின் புதல்வர் திரு வைரவநாதன்  தயாகரன் அவர்கள் வழங்கியிருந்தார்.

திரு தயாகரன் அவர்களுக்கு,  இம்மாணவர்களின் சார்பிலும்,அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் சார்பிலும் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux