தீவகம் நாரந்தனையில் மிகச்சிறப்பாக நடைபெற்ற-முதியோர் திருவிழா-படங்கள் இணைப்பு!

தீவகம் நாரந்தனையில் மிகச்சிறப்பாக நடைபெற்ற-முதியோர் திருவிழா-படங்கள் இணைப்பு!

தீவகம் நாரந்தனையில்,முதியோர்களை கௌரவித்து மகிழ்விக்கும் நோக்கோடு-முதியோர் திருவிழா என்னும் பெயரில் சிறப்பு நிகழ்வு ஒன்று 15.05.2017 திங்கட்கிழமை அன்று நடைபெற்றுள்ளது.

நாரந்தனை முதியோர் சங்கத்தினால்,ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இச்சிறப்பு நிகழ்வில்,முதியோர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு-மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன்-மேலும் முதியவர்களுக்கான விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டு இறுதியில் பரிசுகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் நாரந்தனை பங்குத்தந்தை மற்றும் பொது அமைப்புக்களின் உறுப்பினர்கள் உட்பட  பொதுமக்களும் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டு சிறப்பித்ததாக மேலும்  தெரிய வருகின்றது.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux