வரலாறு மறக்காத நெடுந்தீவு  குமுதினி படுகொலையின் 32வது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்-படியுங்கள்!

வரலாறு மறக்காத நெடுந்தீவு குமுதினி படுகொலையின் 32வது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்-படியுங்கள்!

ஆழ்­க­ட­லின் ஆதிக்­கத்­துக்கு அடங்­கி­ வி­டா­மல் கற்­பார்­கள் காவல் செய்ய பனை­யும் பூவ­ர­சும் மற்­றும் விருட்­சங்­க­ளும் துணை­யி­ருக்க கல்­வேலி  அழகை மெரு­கூட்ட  நிம்­ம­தித் தூக்­க­மி­டும் சுந்­தர பூமி எம் நெடுந்­தீவு.
நீண்ட கடல் வெளி­யால் பிள­வுண்டு கிடப்­பி­னும் எம்­ம­வ­ரின் சிந்­த­னை ­க­ளும் செயல்­வ­டி­வங்­க­ளும் ஓங்கி ஒலித்த படி என்­றும் இருக்­கும். சுனா­மி­யால்­கூட நெடுந்­தீ­வைத் தொட முடி­யா­மற் போனது. அப்­ப­டி­யா­ன­தொரு தேசத்­தின் சொந்­தங்­கள் மீதே 1985ஆம் ஆண்டு மே 15ஆம்  நாள்  அந்த வர­லாற்­றுத் துய­ரம் சுமத்­தப்­பட்­டது. 
நெடுந்­தீவு மக்­கள் மட்­டு­மன்றி உல­கமே உறைந்து போன நாளா­கி­ய­து­டன், விடு­தலை வேட்­கையை மேலும் வீறு­கொள்ள வைத்த வர­லாற்­றுச் சம்­ப­ வ­மா­க­வும்  அது அமைந்­தி­ருந்­தது.
நாளாந்த கட­மை­க­ளின் பொருட்டு அன்­றைய நாளும் அப்­பா­வித்­த­ன­மாக பய­ணம் ஆரம்­ப­மா­னது. குழந்­தை­கள், தாய்­மார், அரச உத்­தி­யோ­கத்­தர்­கள், பெரி­ய­வர்­கள் என அறு­ப­துக்­கும் மேற்­பட்­டோர் பய­ணம் செய்த குமு­தி­னிப் படகு பரந்த கடல்­வெ­ளி­யில் நிறுத்­தப்­பட்­டது. 
பய­ணி­கள் கரை வந்து விட்­டதா? என எட்­டிப் பார்த்த வேளை சிறிய படகு ஒன்­றில் வந்­த­வர்­கள் குமு­தி­னிப் பட­கில் ஏறிக் கொண்­ட­னர். சோத­னை­யிட வேண்­டும் என்று கூறி எல்­லோ­ரை­யும் பின்­பக்­கம் அறைக்கு (கொம்­போட்­மென்ட்) செல்­லும் படி­யும் பணித்­த­னர். 
பின் ஒவ்­வொ­ரு­வ­ராக முன் அறைக்கு (முத­லா­வது கொம்­போட்­மென்ட்)  வர­வ­ழைக்­கப்­பட்டு கத்தி, கோடரி, கொட்­டன்­கள் என்­ப­வற்­றால் அடித்­தும் வெட்­டி­யும் கொத்­தி­யும் சித்­தி­ர­வ­தை­கள் செய்து சரித்­த­னர்.
கட­மையே கண்­ணென வாழ்ந்து காட்­டிய அதி­பர் திரு­மதி புஸ்­ப­ராணி வேலுப்­பிள்ளை, ஆசி­ரி­யர் க.சதா­சி­வம் குமு­தி­னி­யின் பிர­தானி தேவ­ச­கா­யம்­பிள்ளை இ.போ.ச.ஊழி­யர்­க­ளான ந.கந்­தையா, ச.கோவிந்­தன் மற்­றும் க.கார்த்­தி­கேசு போன்­றோ­ரு­டன் கர்ப்­பி­ணிப் பெண் உட்­பட ஈவி­ரக்­க­மின்றி யாவ­ரும் குத­றப்­பட்­ட­னர். குருதி வெள்­ளத்­தில் தத்­த­ளித்த இவர்­க­ளில் 36 பேர் கொலை­வெ­றிக்கு இரை­யா­கி­னர். ஏனை­ய­வர்­கள் உயிர்­தப்­பி­னா­லும் நீண்­ட­கால நோயா­ளி­க­ளா­கவே அவர்­க­ளால் வாழ முடிந்­தது.
இன­வாத அர­சி­ய­லின் கோர­மும், கோழைத்­த­ன­மும் வெளிப்­ப­டுத்­தப்­பட்ட இந்­தச் சம்­ப­வம் தமிழ் இன விடி­ய­ லுக்­காக இளை­ஞர்­களை வீறு­கொள்­ள ­வைத்த வர­லாற்­றுத் தடங்­க­ளில் முதன்­மை­யா­ன­தெ­ன­லாம். சுமு­க­மான ஒரு சூழ்­நிலை நில­வும் போது, குடும்ப உற­வு­க­ளோடு இணைந்­தி­ருக்க வேண்­டி­ய­வர்­கள் இன்று இல்லை என்­பதை எண்­ணிப்­பார்க்­கை­யில் இது எத்­தனை கொடு­மை­யா­னது என்­பது புரி­யும்.
வெட்­டு­வ­தும் கொத்­து­வ­தும் வேரோடு சாய்ப்­ப­து­வும் இன­வாத சக்­தி­க­ளுக்கு இது புதி­ய­தல்ல. குமு­தி­னி­யில் மட்­டு­மல்ல குரு­ந­க­ரி­லும் இதே கொடுமை நிகழ்ந்­தது.
கவி­ஞர் கண்­ணில் குமு­தி­னிப் படு­கொலை
சம­கால கவி­ஞர்­க­ளால் குமு­தி­னிப் படு­கொலை கவி­வ­ரி­க­ளில் வெளி­வந்­தன.
குமு­தி­னிப் பட­கில் யார் வெட்­டி­னார்­கள்… 
குரு­ந­கர் கட­லில் ஏன்  கொத்­தி­னார்­கள்… 
நயி­னைக்­க­விக்­கு­லத்­தின் 
“கார்த்­தி­கேசு என்­ன­வா­னாள்…” 
என்று நீளும்  கவி­ஞர் புதுவை இரத்­தி­ன­து­ரை­யின் கவி அவ­ல­மும் 
புங்­கு­டு­தீவு கவி­ஞர் சு.வில்­வ­ரத்­தி ­னத்­தின் “காலத்­து­யர்” கவி­தை­யூ­டாக, 
“முட்­களை வெட்ட ஏந்­திய வாள்­கள் 
மலர்­களை, தளிர்­களை, பிஞ்­சு­கள் 
கனிய நின்ற  தோப்­புக்­களை 
வெட்டி எறிந்த குரு­திக் காட்­டில்
எது பூக்­கும்?
என்ற ஏக்­க­மும் என்­றும் எம் தீவு மக்­க­ளின் நாடித்­து­டிப்­பின் அடை­யா­ளங்­க­ளாய் நீண்டு செல்­லும் 
திருப்பு முனை நோக்கி…
செல்­ல­ரித்­துப்­போன தேச கட்­டு­மா­னங்­க­ளில் எம்­ம­வ­ரின் இழப்­புக்­கள் நிலை­யா­னவை. இன­வாத அர­சு­களை ஆட்­டங்­காண வைத்த வர­லாற்­றுப் பதி­வு­க­ளில் ஒரு முக்­கிய திருப்­பு­முனை ஈழ விடு­தலை வர­லாற்­றில் என்­றும் ஈரம் காயாத வரி­க­ளாய் நிலைத்து நிற்­பது குமு­தி­னிப் படு­கொலை. அன்று அரச படை­க­ளின் கோரத் தாண்­ட­வத்­தால் குத­றப்­பட்­டோரை ஒன்­று­பட்ட “இளை­ஞர் அணி­க­ளும்”  பொது­மக்­க­ளும் காப்­பாற்­றும் முயற்­சி­யில் ஈடு­பட்­டி­ருந்­த­தால் அநே­க­மா­னோர் காப்­பாற்­றப்­பட்­ட­னர் . 
நினைவு தின­மும் நினை­வா­ல­ய­மும்
இறந்­தோ­ரின் நினை­வாக சமய வழி­பா­டு­க­ளு­டன் ஊர்­வ­லங்­க­ளும்  நினை­வுக்­கூட்­டங்­க­ளும் நடத்­தப்­பட்­டன. “இளம் பற­வை­கள் கலா­மன்­றம்” எனும் அமைப்பு நினை­வா­ல­யம் அமைப்­ப­தற்­கான முதல் முயற்­சியை செய்­தி­ருந்­தது. 
காலப்­போக்­கில் குடி­மக்­கள் குழு, பிர­தேச சபை போன்­றன தற்­போ­தைய நினை­வா­ல­யம் வரை­யான ஆக்­க­பூர்வ பணி­களை மேற்­கொண்­டி­ருந்­தன என­லாம்.
32 வரு­டங்­கள் நிறை­வ­டை­யும் இன்­றைய நாள்­வரை பேசு­பொ­ரு­ளா­கவே குமு­தினி அமைந்­தி­ருக்­கின்­றது.
குமுதி­னிப் பட­கின் சேவை­யும் தேவை­யும்
குமு­தி­னிப்­ப­டகு இற்­றைக்கு சுமார் 80 வரு­டங்­க­ளுக்கு முன் கட்­டப்­பட்­டது. இன்­று­வரை அது சேவை செய்து வரு­கின்­றது. இடை­யில் பழு­தா­னால் பத்­தி­ரி­கை­கள் சோக­கீ­தம் பாடு­வ­தைக் கேட்­க­லாம். அத்­தனை முக்­கி­யத்­து­வம் குமு­தி­னிக்கு உண்டு. 
காற்­றும் மழை­யும் வெயி­லும் கொடு மழை­யும்
ஏற்று எமைச் சுமக்­கும் குமு­தி­னித்­தாய் 
கூற்­று­வ­ரின் கூட்­டக்
கொடுங்­கற்றி வாள்­மு­னை­யில்
வீழ்ந்­தாள் கடல் வெளி­யில்
உப்­பு­தி­ருங்­காற்­றின்­உ­த­வி­யு­டன் கரை­சேர
செத்­த­வ­ராய்ப் போனோம் நாம்
அவளோ…
சாகா­வ­ர­மெ­டுத்­தாள்
மீண்­டும் எமைச் சுமக்க
குமு­தி­னி­யின் வயது எண்­ப­தைத் தாண்­டி­னா­லும் இந்­தத் துன்­பி­யல் இன்­று­டன் 32 ஆண்­டு­க­ளைக் கடந்து நிற்­கின்­றது. எமது வாழ்­வின் நெருக்­கீ­டு­க­ளை­யும், தடை­க­ளை­யும் உணர்ந்­து­கொள்­ளும் ஒரு நாளாக இன்­றைய நாள் அமை­யும்.
குமு­தி­னிக்­குள் நடந்த இந்த சோகங்­க­ளைப் போல் குமு­தி­னி­யும் பல சோகங்­க­ளைச் சுமந்­தும் நெடுந்­தீவு மக்­களை சுமந்து கரை சேர்க்­கும் தாயாக பெரிய பொறுப்­பைச் செய்து வரு­கின்­றாள்.
ஈர­மின்றி இறு­கிப்­போன மனித மனங்­க­ளுக்கு வாழ்­வின் வலி­யை­யும், வழி­யை­யும், வனப்­புக்­க­ளை­யும் சொல்­லும் வள­மான ஆசா­னாய் இன்­றும் எம்­மு­டனே வலம்­வ­ரும் குமு­தி­னி­யாள் என்­றும் அவளே துணை என்ற நினைப்­புக்­க­ ளு­டன் எம்­ம­வ­ரின் கடல்­வ­ழிப்­ப­ய­ணம் தொடர்­கின்­றது.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux