மண்கும்பானைச் சேர்ந்த,சித்ராங்கன்-அனுஷியா தம்பதிகளின் திருமண நாளை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!

மண்கும்பானைச் சேர்ந்த,சித்ராங்கன்-அனுஷியா தம்பதிகளின் திருமண நாளை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!

அல்லையூர் இணையத்தின் 1000 தடவைகள் அன்னதானம் என்னும் பசிதீர்க்கும் அரிய பணியின் 222,223 வது தடவையாக சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!

பிரான்ஸில் வசிக்கும்-மண்கும்பானைச் சேர்ந்த, சித்ராங்கன்-அனுஷியா தம்பதிகளின் 2வது வருட திருமண நாளை முன்னிட்டு-அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தின் ஏற்பாட்டில்-மட்டக்களப்பு அக்கரைப்பற்று கோலாவில் பகுதியில் அமைந்துள்ள அம்மன் மகளிர் இல்ல மாணவிகளுக்கு 06.04.2017 வியாழக்கிழமை அன்று ஒருநாள் சிறப்புணவு வழங்கப்பட்டது.அத்தோடு யாழ் கொழும்புத்துறையில் அமைந்துள்ள புனித சூசையப்பர் முதியோர் இல்ல முதியவர்களுக்கும் அன்றைய தினம் சிறப்புணவு வழங்கப்பட்டது.

சித்ராங்கன்-அனுஷியா தம்பதிகள்-வாழ்வில் எல்லாச் செல்வமும் பெற்றுச் சிறப்புடன் வாழ -இறையருள் வேண்டி வாழ்த்துகின்றோம்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux