கலாநிதி செ.திருநாவுக்கரசு மற்றும் வேலணையூர் பொன்னண்ணா,சுரேஸ் மற்றும்  அல்லையூர்  அருள் தெய்வேந்திரம் ஆகியோரின் புத்தாண்டு வாழ்த்து  இணைப்பு!

கலாநிதி செ.திருநாவுக்கரசு மற்றும் வேலணையூர் பொன்னண்ணா,சுரேஸ் மற்றும் அல்லையூர் அருள் தெய்வேந்திரம் ஆகியோரின் புத்தாண்டு வாழ்த்து இணைப்பு!

அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் சார்பில் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அதேநேரம் அல்லையூர் இணையத்தின் அனுசரணையில் இதுவரை நாம் மேற்கொண்ட-அறப்பணிகளுக்கு நிதி உதவி வழங்கிய நல் உள்ளங்களுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

பிறந்துள்ள   புதிய ஆண்டிலும் எம்மாலான அறப்பணியினை தொடர்ந்து – உங்கள் ஆதரவுடன் மேற்கொள்ள எண்ணியுள்ளோம். எனவே எமது அறப்பணிக்கு தொடர்ந்தும் ஆதரவு  வழங்குவீர்கள் என்று உறுதியாக நம்புகின்றோம்.

இப்புதிய ஆண்டில் எல்லோரும் ஆரோக்கியத்துடன் வாழ இறைவன் துணைபுரிய வேண்டுகின்றோம்.

15824512_1327696433971282_1915494288_o 12469376_1182572975104476_1402055324703207229_o new-year-greetings unnamed-6 new-ffyear-2016-copy-2 d15841245_1367418166659065_905220556_n

 

அமைதியாயிரு  அன்பாயிரு  அருளைப் பெறுவாய்!

( நான் சொல்வது பொய் அல்ல, உண்மை )

அமைதியாயிரு – அனைத்தும் நீ அடைவாய்

அன்பாயிரு – அகிம்சையாய் நீ மலர்வாய்

அருளோடிரு – அகிலமே உனை  அறிவார்

நன்மை செய்து வாழ் – நடப்பவை நலமாகும்

தீமை செய்யாது வாழ் – சிறந்த மனிதனாக வழி உண்டாகும்

உதவி செய்து பார் – உவகை கொண்டு மனம் ஆடும்

உனக்காக மட்டும் வாழ்ந்துபார் – சாவே உன்னை நாடும்

வாழ்வு ஒரு முறை தான்

சாவும் ஒரு முறை தான்

உறவும் ஒரு முறை தான்

உயிர் பிரிவதும் ஒரு முறை தான்

பாசமிழந்து பன்மையிழந்து தனிந்து வாழ்வது கொடுமை

நேசம் துறந்து உதவ மறந்து ஓடி ஒதுங்குவது மகா கொடுமை.

பிரியா உறவா, பெற்றபிள்ளையா, பெற்றதாயா,                                                                                  உன் சொந்த உடலா…. உன் உயிரா..   ஒரு நாள் உன்னை விட்டுப் போகும்..

கொண்ட பணமும், பெற்ற சொத்தும், உன்தன் பதவியும் கூட  – உன்னைவிட்டு ஒரு நாள் ஓடும்.

போயும் போயும் போலிவாழ்க்கை – போகும் முன்னே மாறிவிடு                                                         இந்த உலகை விட்டுப் போகும் முன்னே – உன் பதையை மாற்றிவிடு.

பசித்தவற்கு உணவளி, நோயுற்றோறை நேசி, பணமற்ற பரதேசிக்கு உதவு

நீயும் ஒரு நாள் பரதேசி ஆவாய் – அப்போ உன் புண்ணியம் உன்னைக் காக்கட்டும்

பழம் பெரும் நடிகர்கள் பரதேசியாய் சாகிறார்கள்,                                                                  அவர்கள் தம் பாசத்தை நினைத்து ஏமார்ந்து போய் விட்டார்கள்.                                                             பாசம் வேசமே…. நேசமல்ல…. அது பணத்தை மட்டுமே இப்போ தேடுகிறது.

ஏமாற்றுவதே உறவு தான், பகையாவதும் சொந்த இரத்தம் தான்,                                              சொத்தைப் பறித்துவிட்டு ஒருவேளைக்கு உணவில்லாது                                                               செத்துபோக விடுவதுதான்  – இந்தக்காலப் பாசமாகும்….. 

துடிப்பது தான் பாசம் என்பார்கள் அது பழைய பாசம்,                                                           துடிதுடிக்க வைப்பது தான் புதிய நூற்றாண்டின் பாசம்.

நடிப்பது தான் நட்பு – அது தான் அண்மையில் நாம் அறிந்த புதுக் கதை

பணம் தான் முக்கியமானது, பசிபோக்க, படிப்பைப் பெற, பிறர்மதிக்க, உன்மேல் பாசம் வளர காரணமானது,

பணமா பாசமா என்றால் பணம் தான் – இது தான் உண்மை.

உண்மை தெரியாது பாசம் என்று நினைத்தால் பின் தெரியும் வேசம்.

படிப்பு வேண்டும் உழைப்பு வேண்டும், பணம் வேண்டும் – இதன் பின் பாசம் வேண்டும், எனவே,                  பாசம் பணக்காரனுக்கு இருக்கவேண்டும்.

ஏழையிடம் பணமில்லை – ஆனால் பாசமுண்டு

பணமில்லாத இடத்தில் பாசமுண்டு

பாசமில்லா இடத்தில் பணமுண்டு

இது படைத்தவன் தவறா, மனிதனின் தவறா.

படைத்தவர் அழிப்பது போல், தவறைப் புரிவோரை அழிக்கலாமே – நீதியாவது மிஞ்சும்

பாவிகள், அப்பாவிகள் அல்லவா அழிக்கிறார்கள் – கொடுமை செய்பவன் வாழ்கிறானே

இது யார் தப்பு, இறைவா புரியவையும் அல்லது மாற்றிவையும் – நீதிவேண்டும்.

காலம் மாறுது கருத்தும் மாறுது பாசம் காக்காதே

பணத்தை நீ சேமி உன் பெயரில் போடு அல்லது

நீ முதுமையில் இறுதியில் வீதியில் வாடு

முதியவர் படும் பாட்டைப் பாருங்கள், சொத்தை எழுதிப் பெற்றுவிட்டு

நரகத்தில் தள்ளுகிறார்கள் பிள்ளைகள்

பிச்சை எடுத்து மனம் நொந்து தெருவில் நடக்கிறார்கள் தந்தையர்

வேண்டாத பூனைக்குட்டியை சாக்கில் கட்டி – கடல் கடந்து போட்டாலும் மறுநாள் வீடுவந்துவிடும்                 இது போல் தன் தாயை திக்கு தெரியாத ஊர் கொண்டு போய் விட்டுவிட்டு ஓடுகிறார்கள் பிள்ளைகள்                         அதுவும் பெண் பிள்ளைகள் – இவை இப்போ நடக்கும் குடும்பக் கொடுமைகள்

இதையறியாது ஆமிக் கொடுமை, சாமிக் கொடுமை என்பதைவிட                                                     பாசக்கொடுமை செய்யும் பிள்ளைகளே பாவிகள்                                                                     உங்கள் மரபு அணுவாம், இரத்தமாம், உனக்காக அவர்கள் தசை கூட ஆடவில்லையே …

தானம் என்றால் பணம் போய்விடும் என்கிறார்கள்                                                                  உன்னை மறந்து உதவிடு நீ தாண்டா மனிதன்

தன்னிடமில்லாது துடித்து பிறரிடம் கடன் வாங்கி கொடுப்பவன் தாண்டா – இப்போதய வள்ளல்                                      பாரி, முல்லைக்கு தேர் கொடுத்தான்,சிவிச்சக்கரவத்தி தன் தசையை புறாவுக்காகக் கொடுத்து மடிந்தான். மரங்களை, பறவைகளை நேசித்து அவர்கள் உதவினார்கள்.                                                        இவர்கள் தன் தாய் தந்தையை – தன் இனத்தை நேசிக்காத தமிழராகிறார்களே.

தமிழனே தமிழனை மதிக்கிறானில்லை

வணக்கம் சொல்லவே அவனுக்கு வார்த்தையில்லை

வசதிபடைத்தவர்களைக் கண்டால் வாய் திறக்கிறது

மற்றவரைக் கண்டால் கண்மூடுகிறது – இப்போ கடவுளும் அப்படிதான்

பேசவும் மாட்டார் உதவவும் மாட்டார் – கடவுளும் தமிழர் போல தான்.

சிந்திந்துப் பார்த்து பிறருக்காக – உன் சிறந்த சிந்தையில் வாழு

2017ம் ஆண்டை திட்டமிட்டு செயல்படுத்து அல்லையூர் இணையம் போல்..

ஏழைகள், பாவிகள், எழ்மையில் வாழும் எம் இன மக்களை நினைத்து நீ

ஏதாவது செய்யப்பார், உணவிற்கு, படிப்பிற்கு, வாழ்வதற்கு என தவிப்பவர்கள் பலபேர்.

நாம் புலம் பெயர்ந்து வாழ்ந்து செய்யும் தேவையற்ற, ஆடம்பர செலவுகளை விட்டு

தானம் செய்வோம்.  தானம் செய்ய வழியா இல்லை, அல்லையூர் இணையத்தை நாடு

தானம் செய்வதால் நீ மனிதனாகிறாய்,

அன்பு செய்வதும், தானம் செய்வதும் வாழ்க்கையில் அவசியமானது

அதை மறந்து வாழ்ந்துவிட்டால் உயிர் பிரியும் போது பயம் வரும் உனக்கு – காரணம்.

உன்னை நீயே அறிவாய் – நான் என்ன செய்தேன் என்று, அது காலம் கடந்து விட்டதாகிவிடும்

கவலையை விடு  இன்றே தானம் செய், உன் பிறந்தநாளா – பணத்தை வீணாக்காதே தானம் செய்

உன் திருமணநாளா – பணத்தை வீணாக்காதே பசி போக்க தானம் செய்

உனக்கு சுகவீனமா கடவுளை மன்றாடாதே – தானம் செய்  நலமடைவாய்

புப்புனித நீராட்டு விழாவா  கொண்டாடு – ஊரிலுள்ள அதோ வயது பிள்ளைகளுக்கு                            கல்விக்காக உதவிட – அன்றோ ஒரு தொகையைக் கொடுத்துதவு

தானம் செய்யவா வழியில்லை, நீ செலவழிக்கும் வீண் செலவு  எத்தனையிருக்கிறது                                  ஒரு நாளைக்காவது விட்டுவிடு

தானம் செய்துவிட்டு போ, அதன் நன்மைகள், ஆசிகள் உன் பிள்ளைக்கே போய் சேரும் – வீண்போகாது.

தானம் செய் மகிழ்ச்சியடைவாய்

தானம் செய் திருப்தியடைவாய்

தைமாதம் 26ம் திகதி சனி மாற்றம் உங்களைத் திருத்திவைக்கும்

திருந்தவைக்கும், திரும்பிப் பார்க்கவைக்கும்

தானம் செய் இறை அருளைப் பெறுவாய்…….

அல்லையூர் அருள் தெய்வேந்திரன் – சுவிஸ்.  (சோதிடர், கவிஞர்) www.arulsothidam.com

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux